இந்தோனேசியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவிக்க (லூ தேவி 62, சகரினி 35), 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மங்கோலியா 10 ஓவரில் 15 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தொடக்க வீராங்கனை இச்சின்கர்லூ 5 ரன் எடுத்ததே அதிகபட்சமாக அமைந்தது. 7 பேர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். இந்தோனேசியா 172 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை வசப்படுத்தியது. இந்தோனேசிய தரப்பில் ஆண்ட்ரியானி 4 விக்கெட் அள்ளினார். 2வது ஆட்டத்தில் மலேசியா – ஹாங்காங் அணிகள் களம் கண்டன. மலேசியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுக்க, அடுத்து களமிறங்கிய ஹாங்காங் 20 ஓவரில் 82 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. மலேசியா 22ரன் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இன்று நடைபெறும் தகுதிச்சுற்று காலிறுதியில் ஹாங்காங்-மங்கோலியா மோதுகின்றன.
The post ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட் இந்தோனேசியாவுக்கு எதிராக 15 ரன்னில் சுருண்டது மங்கோலியா: மலேசியா அபார வெற்றி appeared first on Dinakaran.
