ஒடிசா பெண் கூட்டு பலாத்காரம் 5 பேர் கைது

மானாமதுரை: ஒடிசா பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட் டனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பூக்குளம் கிராமத்தில் பாண்டி என்பவரது செங்கல் காளவாசல் உள்ளது. இங்கு ஒடிசாவை சேர்ந்த 30 வயது பெண் 2 மகன்களுடன் வேலை செய்து வருகிறார். கணவர் இறந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, காளவாசலில் வேலை செய்யும் கீழப்பசலை கிராமத்தை சேர்ந்த ஆதி (20) என்பவருடன் இந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 15ம் தேதி இரவு ஆதி மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர், ஒடிசா பெண் வீட்டிற்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்துவிட்டு தப்பினர். புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிந்து ஆதி, ரஞ்சித் (22), கஜேந்திரன் (19), அருண்குமார் (22), மற்றும் 16 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த பலாத்கார காட்சிகள் இருந்த செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post ஒடிசா பெண் கூட்டு பலாத்காரம் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: