கரூர் மாவட்டத்தில் மாமிச விற்பனையில் வெள்ளாடுக்கு இணையாக செம்மறி விற்பனை ஜோர்

கரூர்: கரூரில் மாமிச விற்பனையில் வெள்ளாட்டுக்கு இணையாக செம்மறி ஆடு விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. ஆதி காலத்தில் இருந்தே மனிதர்கள் மாமிசத்தை விரும்பி உண்ணும் பழக்கம் இருந்து வந்துள்ளது. முதன்முதலாக மனிதன் விலங்குகளை வேட்டையாடி உண்டு வந்தான். அதன்பின் உடலில் சக்தி குறைய குறைய காய்கனி உணவிற்கு சற்று மாறி வந்தனர். ஆனால் இன்று வேட்டையாடி விலங்குகளை சாப்பிடுவதற்கு ரெட் கிராஸ் அமைப்பு மற்றும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மேலும் மனிதர்களும் வேட்டையாடுவதை தற்போது அதிகம் விரும்புவதில்லை. சில கிராமப்புற பகுதிகளில் மட்டுமே குறைவான அளவு வேட்டையாடும் பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
அதற்கு மாறாக மனிதர்கள் இன்று கால்நடைகளை வீட்டிலே வளர்த்து உணவாக உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி, கௌதாரி, மாடு, பன்றி ஆகியவற்றை வளர்த்து வணிக ரீதியாக விற்பனை செய்வதுடன், தனக்கு தேவையான உணவுகளை தாங்களே தயார் செய்து கொள்ளும் அளவிற்கு மேற்கூறிய கால்நடைகளை பொதுமக்கள் உண்ணும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது.

ஒருசில ஊர்களில் ஒரு வளர்ந்த பெரிய ஆடுகளை பத்து நபர் அல்லது ஐந்து நபர் தனியாக வாங்கி, வெட்டி தோல் உரித்து துண்டு துண்டுகளாக நறுக்கி மாமிசத்தை பகிர்ந்து கொள்கின்றனர். மேலும் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலும் இறைச்சி கடைகளில் வெள்ளாடுகளே விரும்பி உண்ணும் பழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது. அதேசமயம் முஸ்லிம் சமுதாய மக்கள்தான் செம்மறி ஆடுகளை அதிகம் விரும்பி உண்ணும் பழக்கம் இருந்து வந்தது. ஆனால் இன்று அனைத்து சமூக மக்களும் வெள்ளாடு செம்மறி ஆடு இறைச்சிகளை வேறுபடுத்தி பார்க்காமல் விரும்பி வாங்க உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

5 ஆண்டுக்கு முன் வெள்ளாட்டின் இறைச்சி விலை செம்மறி ஆட்டின் விலையை விட அதிகமாக இருக்கும்.ஆனால் இன்று இறைச்சி கடைகளில் யாரும் வெள்ளாடு செம்மறி ஆடு வேறுபடுத்தி பார்ப்பதில்லை. விலையும் கரூரில் ஒரு கிலோ ரூ.700 முதல் 800 வரை இறைச்சியின் தன்மைக்கு ஏற்பாடு போல் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் இறைச்சி கடைகளில் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களும் இறைச்சியில் உள்ள ரத்தம், குடல், தலை, கால் என பல்வேறு பாகங்களுக்கு தனித்தனி விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். எனவே, கரூரில் ஆடு வளர்ப்பு தொழில் ஒரு சபாஷ் ஆன தொழிலாக மக்கள் கருதுகின்றனர்.

The post கரூர் மாவட்டத்தில் மாமிச விற்பனையில் வெள்ளாடுக்கு இணையாக செம்மறி விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Related Stories: