திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் ₹1.55 கோடி காணிக்கை

திருத்தணி. செப். 16: திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் பக்தர்களின் காணிக்கையாக ₹1.55 கோடி பெறப்பட்டது. திருத்தணி முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். இக்கோயிலுடன் சுமார் 26 உப கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் உண்டியல் காணிக்கை மற்றும் திருப்பணி காணிக்கை அனைத்தையும் கடந்த 31 நாட்களில் வசூலான காணிக்கையை நேற்றுமுன்தினம் மலைக்கோயில் வளாகத்தில் அறங்காவலர் குழு தலைவர் தரன் அறங்காவலர்கள் உஷார் ரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் இணை ஆணையர் ரமணி மேற்பார்வையில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவன அமைப்புகளைச் சேர்ந்த பக்தர்கள் மூலம் காணிக்கைகள் பிரித்து என்ன பட்டன. இதில் கடந்த 31 நாட்களில் 1,55,56,041 ரூபாயும், தங்கம் 960 கிராம், 11 கிலோ வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். மேலும், திருப்பணிகாணிக்கையாக ₹5,29,665 பக்தர்கள் வழங்கி உள்ளனர். இதில், வரப்பெற்ற காணிக்கை பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளி கோயில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது என கோயில் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் ₹1.55 கோடி காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: