தபால் துறை குறை தீர்க்கும் கூட்டம்

சேலம், செப். 15:கோட்ட அளவில் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 26ம் தேதி காலை 10.30 மணிக்கு சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் தலைமை தபால் அலுவலகத்தில் நடக்கிறது. பொதுமக்கள் அனைவரும் தபால் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகார்களை குறை தீர்க்கும் நாளன்று நேரிலோ அல்லது முதுநிலை கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம், சேலம் -636001 என்ற முகவரிக்கு வரும் 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் உறையின் மேல் ‘தக் அதாலத்’ என்று எழுத வேண்டும்.

மணியார்டர், விபிபி, விஐபி, பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்கள் எனில் அனுப்பிய தேதி, முழு விலாசம், பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயர் அனைத்து இடம் பெற்றிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகார்கள் எனில் கண்க்கு எண், பாலிசி எண், வைப்பு தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் இருந்தால் தெரிவிக்க வேண்டும். இத்தகவலை சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

The post தபால் துறை குறை தீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: