அவிநாசியில் ஒருமைப்பாடு காக்க தமிழக மக்கள் ஒற்றுமை மேடை: அமைப்பு ஆலோசனை கூட்டம்

 

அவிநாசி, செப்.15: அவிநாசியில், ஒருமைப்பாடு காக்கும் வகையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஆலோசனை கூட்டம் அவிநாசி வடக்கு தேர்வீதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு மதங்கள், இனங்கள் ஒற்றுமையுடன் செயல்படுவது என்கிற நோக்கத்தில் இயங்கி வருகிறது. பல்வேறு மதங்களை பின்பற்றும் பொதுமக்கள் இடையே ஒருமைப்பாட்டை வளர்க்கின்ற நோக்கில், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஆலோசனை கூட்டம் நேற்று இரவு அவிநாசி வடக்கு தேர்வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில், நடைபெற்றது.

இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஈசுவரன், வழக்கறிஞர் மோகன், எல்ஐசி பழனிசாமி ஆகியோர் ஆலோசனைகளை வழங்கி பேசினர். கூட்டத்தில், மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் தங்கவேல், செயலாளர் சுந்தர வடிவேல், ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, நல்லது நண்பர்கள் ரவி, நடராஜ், குமார ராஜா, சையத் முகமது, முகமது சித்திக், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க துணைத்தலைவர் நடராஜ், பாபுலால், கிறிஸ்துவ முன்னணி மாவட்டத்தலைவர் தங்கவேலாயுதம், முசாபர்ஆலம், அப்துல் மஜீத், அரசு கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மணிவண்ணன், தமுஎகச தினகரன், பழனிசாமி, சாயிகண்ணன், கோபாலகிருஷ்ணன், தேவி உள்பட பலர் மக்கள் ஒற்றுமை மேடை நிகழ்ச்சியில் பேசினர்.

The post அவிநாசியில் ஒருமைப்பாடு காக்க தமிழக மக்கள் ஒற்றுமை மேடை: அமைப்பு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: