சிவபுரிபட்டி சுயம்பரகேஸ்வரர் கோயில் பாலாலயம்

சிங்கம்புணரி, செப். 14: சிவபுரிபட்டி சுயம்பரகேஸ்வரர் கோயிலில் பாலாலயம் நடைபெற்றது. சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சுயம்பரகேஸ்வரர், கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் குடமுழுக்கு செய்வதற்கு கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதையொட்டி நேற்று பாலாலய விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுயம்பரகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு தீபாரதனைகள் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் சிங்கம்புணரி, சிவபுரிபட்டி உள்ளிட்ட சுற்று கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post சிவபுரிபட்டி சுயம்பரகேஸ்வரர் கோயில் பாலாலயம் appeared first on Dinakaran.

Related Stories: