நிரந்தர தீர்வு காணப்படுமா? குறுமைய விளையாட்டு போட்டிகளில் கார்மெல் பள்ளி அசத்தல்

காங்கயம், செப்.14: காங்கயம் குறுமைய விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 12 வரை வெள்ளகோவிலில் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில், காங்கயம் கார்மெல் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சதுரங்கம், கேரம், கோகோ, கைப்பந்து மற்றும் தடகள போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 14 வயது பிரிவில் கோகோ விளையாட்டில் முதலிடம், கைப்பந்து விளையாட்டில் முதலிடம் கேரம் விளையாட்டில் இரட்டையர் பிரிவில் 2ம் இடம், 17 வயது பிரிவில் சதுரங்க விளையாட்டில் சந்தியா 2வது இடம், கோகோ விளையாட்டில் இரண்டாம் இடம், கைப்பந்து விளையாட்டில் 2வது இடம், கேரம் விளையாட்டில் இரட்டையர் மற்றும் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

19 வயது பிரிவில் கேரம் விளையாட்டில் ஒற்றையர் இரட்டையர் பிரிவில் 2வது இடம், கோகோ விளையாட்டில் 2வது இடம், தடகள போட்டிகளில் 14 வயது பிரிவில் உதன்யா, 200மீ 600மீ மூன்றாம் இடம், தீப்ஷிகா உயரம் தாண்டுதல் இரண்டாம் இடம், தர்ஷினி உயரம் தாண்டுதல் மூன்றாம் இடம், 4×100மீ தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடம், 17 வயது பிரிவில் நவநிதி 100மீ 200மீ முதலிடம், ஈட்டி எறிதலில் மூன்றாம் இடம், ஜீவிகா 400மீ முதலிடம் 200மீ இரண்டாம் இடம். 19-வயதுபரிவில் ரக்ஷிகா 800மீ முதலிடம் 400மீ இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

அகஷ்டியா 15 வெற்றி புள்ளிகளுடன் தனிநபர் பட்டம் பெற்றார். ஒட்டுமொத்தமாக 95 வெற்றி புள்ளிகள் பெற்று தொடர்ந்து 19 வருடமாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளையும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி அமலோர் மற்றும் ஆசிரியர்களும் வாழ்த்தி பாராட்டினார்கள்.

The post நிரந்தர தீர்வு காணப்படுமா? குறுமைய விளையாட்டு போட்டிகளில் கார்மெல் பள்ளி அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: