கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பிரமுகரின் நண்பர் அலுவலகத்தில் சோதனை

கும்மிடிப்பூண்டி, செப். 14 : கும்மிடிப்பூண்டி அருகே முன்னாள் அதிமுக எம்எல்ஏவின் நண்பர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி நடத்தினர். சென்னை தி.நகர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யா (எ) சத்தியநாராயணன். இவரது நெருங்கிய நண்பர் திலீப்குமார். இவருக்கு சொந்தமாக கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில் யாமினி திருமண மண்டபம், ஏஎம்சி ரெசிடென்சி ஓட்டல் மற்றும் யாமினி புரமோட்டர்ஸ் உள்ளிட்ட 3க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், ஆரம்பாக்கம் பகுதியில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யாவின் நெருங்கிய நண்பரான திலீப்குமாருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் நேற்று காலை 7 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், குறிப்பாக யாமினி பிரமோட்டர்ஸ் அலுவலகத்தில் இருந்து நிலங்கள் மற்றும் வீடுகள் விற்பனை உள்பட பல்வேறு, முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டரில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பணப் பட்டுவாடா உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்களை, திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தமிழரசி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் கைப்பற்றி விசாரித்தனர். இதில், ஆந்திர மாநிலப் பகுதியில் முறைகேடாக நிலம் வாங்கியது குறித்த, ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சோதனையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ மற்றும் அவரது நண்பர் திலீப்குமாருக்கு இடையே பணபரிவர்த்தனைகள் தொடர்பான, பல்வேறு முக்கிய ஆவணங்களும் சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ேமலும், லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் விசாணையை முடித்து கொண்டு சுமார் 2 மணி அளவில் அங்கிருந்து கிளம்பினர். தி.நகர் சத்யா எம்எல்ஏவாக இருந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு மீறிய சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், ஆரம்பாக்கம் பகுதியில் லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த அதிரடி சோதனையில் நடத்தப்பட்டது.

ரியல் எஸ்டேட் கூட்டாளி வீட்டில் சோதனை
தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் உள்ள அதிமுக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ். இவரும் தி.நகர் சத்யாவும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். எனவே, வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று காலை 7.00 மணி முதல் 6 பேர் கொண்ட குழுவினர் ஆர்.எஸ்.ராஜேஷ் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது சோதனை நடைபெறும் ராஜேஷ் வீட்டில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆர்.எஸ்.ராஜேஷ் தமிழ்நாடு கூட்டுறவு நுகர்வோர் இணையத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பிரமுகரின் நண்பர் அலுவலகத்தில் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: