ஈரோட்டில் சாய ஆலை கழிவுகளுக்கு எதிராக களமிறங்கிய கிராம மக்கள்: வாட்ஸ் ஆப்-பில் குழுவாக இணைந்து நீராதாரங்களை காக்க முயற்சி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் மாசு ஏற்படுத்தும் ஆலை கழிவுகளை தடுக்க பாதிக்கப்பட்ட கிராம மக்களே ஒன்றிணைந்து 24 மணி நேர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். பெருந்துறையில் 2,700 ஏக்கர் பரப்பளவில் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சிப்காட் தொழில் மையம் அமைக்கப்பட்டது. ஆசிய அளவில் மிகப்பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்றான இன்று சாய ஆலைகள், இரும்பு உருக்கும் ஆலைகள், பிளாஸ்டிக் நிறுவனங்கள், டைல்ஸ் உற்பத்தி கூடம் என 157 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் விதிகளை மீறும் சில ஆலைகளால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு கடுமையான இன்னல்களை சுற்றுவட்டார பகுதி மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக எதிர்ப்பு குரல்கள் எழுப்பியும் பயன் இல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட கிராம மக்களே நேரடியாக களம் இறங்கியுள்ளனர். வாட்ஸ் ஆப் குழு மூலம் இணைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குழுக்களாக இணைந்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஆலைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆலை கழிவுகளை முழுமையாக தடுக்கும் வரை தங்களது கள பணி தொடரும் என்று கூறும் கிராம மக்கள் ஆலைகள் சுற்று சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இயக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

The post ஈரோட்டில் சாய ஆலை கழிவுகளுக்கு எதிராக களமிறங்கிய கிராம மக்கள்: வாட்ஸ் ஆப்-பில் குழுவாக இணைந்து நீராதாரங்களை காக்க முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: