ஆனால் பல்வேறு காரணங்களாலும், வனத்துறையின் நெருக்கடியாலும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து படகுகளும் அணையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பின்னர் பாபநாசம் அணைக்கு மேல் உள்ள பாணதீர்த்த அருவியை பார்க்க வனத்துறை அனுமதித்துள்ளது. சுற்றுலா பயணிகள் காரில் சென்று பார்க்க ஏற்பாடு; நபர் ஒருவருக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
The post நெல்லை மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பாணதீர்த்த அருவியை பார்க்க 18ம் தேதி முதல் அனுமதி..!! appeared first on Dinakaran.