வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை சரிவு

 

திருப்பூர், செப்.12: காய்கறிகள் வரத்து அதிகரிப்பால், தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும், 50 டன் காய்கறி வரத்து இருக்கும். கடந்த மாதத்தின் தொடக்கத்தில் காய்கறிகள் விலை உயர்ந்து இருந்தது. இதில், தக்காளி விலை உச்சத்தில் இருந்தது.அதன்பின்னர், காய்கறிகள் விலை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் மீண்டும் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

விலை உச்சத்தில் இருந்த தக்காளி, முருங்கைக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், பீர்க்ங்காய் ஆகியவற்றின் விலை தற்போது பெருமளவில் குறைந்துள்ளது. இதனால், பெரும்பாலான காய்கறிகள் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் 15 ரூபாய் வரை குறைந்துள்ளது. குறிப்பாக, இரு வாரங்களுக்கு முன் கிலோ 30 ரூபாய் இருந்த தக்காளி, கிலோ, 12 ரூபாயாக குறைந்தது. கிலோ 70 ரூபாய் வரை விற்கப்பட்ட அவரை கிலோ 50 ரூபாய், 50 ரூபாய்க்கு விற்ற பீர்க்கங்காய் 35 ரூபாய், 80 ரூபாயாக இருந்த சின்ன வெங்காயம், 40 ரூபாயாக விலை குறைந்து.

இதேபோல், காளிபிளவர், முட்டைகோஸ், மேரக்காய், உருளைக் கிழங்கு ஆகிவற்றின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,“தக்காளி விலை உயர்ந்தால் அனைத்து காய்கறிகளின் விலையும் உயரும். குறைந்தால், அனைத்து காய்கறி விலையும் குறையும். அவ்வகையில், தக்காளி விலை கிலோ 12 ரூபாய்க்கு வந்து விட்டதால், கேரட், பீன்ஸ், எலுமிச்சை தவிர, அனைத்து காய்கறிகளின் விலையும் 30 முதல் 50 ரூபாய் என்ற நிலைக்கு வந்து விட்டது’’ என்றனர்.

The post வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை சரிவு appeared first on Dinakaran.

Related Stories: