காரைக்கால் அம்மையார் திருக்குளத்திற்கு சோலார் மின்விளக்கு வேண்டும்

காரைக்கால், செப்.12: காரைக்கால் மக்கள் நலக் கழக செயலர் பக்கிரிசாமி காரைக்கால் சிட்டி யூனியன் வங்கி மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்காலில் அண்மையில் சிட்டி யூனியன் வங்கியின் காரைக்கால் கிளையின் சி.எஸ்.ஆர் நிதியின் கீழ் காரைக்காலில் திட்டம் நிறைவேற்ற கோரிக்கை விடுத்தோம். அந்த விழாவில் கலந்து கொண்ட துணை பொதுச் செயலாளர் (கடன் பிரிவு) எங்களது கோரிக்கையை ஏற்று விரைவில் செயல்படுத்துவதாக உறுதியளித்தார்.

வங்கியின் காரைக்கால் கிளையின் வெள்ளி விழா நினைவாக சிஎஸ்ஆர் நிதியின் மூலம் காரைக்கால் அம்மையார் திருக்குளத்தின் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சூரிய மின்சாரம்(சோலார் பேனல்) அமைத்து தர வேண்டும். ஏனெனில் அம்மையார் திருக்குளம் பெரும்பாலும் காரைக்கால் மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்ட மக்களும் தினமும் அதிகாலை 5 முதல் இரவு மணி 10 மணி வரை பொழுது போக்கவதற்காகவும் பயன்படுத்துவதோடு காரைக்கால் கடற்கரைக்கு அடுத்து சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக உள்ளது.தற்போது மின் கட்டணத்தை நிதி நெருக்கடியால் உள்ள கயிலாசநாதர் தேவஸ்தானம் நித்யகல்யாண பெருமாள் வகையறா தேவஸ்தானம் செலுத்தி வருவதால் தேவஸ்தானத்திற்கு மிகப்பெரிய சுமையாக உள்ளது. எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக சூரிய மின்சாரம் அமைத்து தர வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டள்ளது.

The post காரைக்கால் அம்மையார் திருக்குளத்திற்கு சோலார் மின்விளக்கு வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: