வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது ஜப்பானின் “ஸ்லிம்” விண்கலம்..!!

இந்தியாவை தொடர்ந்து சந்திரனில் ஆய்வு மேற்கொள்வதற்காக மிகச்சிறிய லேண்டரை ஜப்பான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து H-IIA ராக்கெட் மூலம் தனது சந்திர பயணத்தை தொடங்கியது ஸ்லிம் லேண்டர். நிலவின் சுற்றுவட்ட பாதையில் ஜப்பானின் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. முதலில் 3 முதல் 4 மாதங்களுக்கு சந்திரனை சுற்றி வரும் லேண்டர், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நிலவில் தரையிறங்க முயற்சிக்கும் என்று ஜப்பான் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ஆய்வுகளில் ஜப்பானின் இலகுரக லேண்டர் ஈடுபட இருப்பதாகவும், நிலவின் பாறைகளை ஆராய்வதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

The post வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது ஜப்பானின் “ஸ்லிம்” விண்கலம்..!! appeared first on Dinakaran.

Related Stories: