‘நாங்களும் ரவுடிதான்’ என ரகளை மக்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது

செய்யாறு: செய்யாறு அருகே ‘நாங்களும் ரவுடிதான்’ என ரகளையில் ஈடுபட்டு, பொதுமக்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா குண்டியாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(20), உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம் நகரைச் சேர்ந்தவர் அரவிந்தன்(22). இருவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் குடித்துவிட்டு ‘நாங்களும் ரவுடிதான்’ என சினிமா பாணியில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை சபேஸ் என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக், அரவிந்தன் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததோடு, கையில் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து அங்கு கும்பலாக இருந்த பொதுமக்கள் மீது வீசி உள்ளனர். இதனால்அப்பகுதியினர் சிதறி ஓடினர். இதையடுத்து இருவரும் பைக்கில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து சபேஸ் புகாரின்படி தூசி போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக், அரவிந்தன் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

ரயில்வே ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: வாணியம்பாடி மேட்டுப்பாளையம் ஆபீசர்ஸ் லைன் பகுதியை சேர்ந்தஇனியவள் (52). என்பவர் வீட்டின் மீது ல் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளனர். இதில், வீட்டின் ஜன்னல், கண்ணாடிகள், மின்விளக்குகள், கதவு உடைந்து சேதமானது.

The post ‘நாங்களும் ரவுடிதான்’ என ரகளை மக்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: