சாலையோரத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்தது நாரணமங்கலம் அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

பாடாலூர்,செப்.6: ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் சர்வபள்ளி எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டு தோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் பவுலின் பானுமதி தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் படத்திற்கு தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பள்ளியின் மாணவ-மாணவிகள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு நடனமாடி அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சுகன்யா, ஆசிரியர்கள் கீதா, கவிதா, சத்தியசீலன், பள்ளி மாணவ – மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சாலையோரத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்தது நாரணமங்கலம் அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: