இதையடுத்து இரவில் அவரது வீட்டிற்கு சென்று மோகன்ராஜ், அவரது தம்பி செந்தில்குமார், தாய் புஷ்பவதி (68), சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகிய 4 பேரை வெட்டிக்கொலை செய்துள்ளனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக வெங்கடேஷ் என்பவர் தனது நண்பர்கள் செல்லமுத்து, சோனை முத்தையா ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிந்து, செல்லமுத்துவை நேற்று முன்தினம் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்ற செல்லமுத்துவை அழைத்து சென்றபோது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து செல்லமுத்து குதித்தார்.
இதில், அவரது வலதுகாலில் முறிவு ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தலைமறைவான வெங்கடேஷ், சோனை முத்தையா ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதனிடையே மோகன்ராஜ், செந்தில்குமார், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகியோரது உடல்கள் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. ஆனால் உறவினர்கள் உடல்களை பெற மறுத்து, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நேற்று 2வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து எஸ்பி சாமிநாதன், ஒருவரை கைது செய்துவிட்டதாகவும், மற்ற 2 பேரையும் விரைவில் கைது செய்துவிடுவோம் என்றும் உறுதியளித்தார். அதன்பின் 4 பேரின் உடல்களையும் உறவினர்கள் பெற்றுச் சென்று இறுதிச்சடங்கை செய்தனர்.
The post பல்லடம் அருகே 4 பேர் படுகொலை கைதான வாலிபர் தப்பியோட முயன்றதால் கால் முறிந்தது: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குதித்தார் appeared first on Dinakaran.