கலைஞர் நூற்றாண்டு விழா: மாபெரும் கிரிக்கெட் போட்டி

திருத்தணி: திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த போட்டியை ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கலைவாணன் வரவேற்றார்.

உடன் மாவட்ட துணை செயலாளர் ஜெயபாரதி, ஒன்றிய துணை செயலாளர் நீலாவதி ஸ்ரீனிவாசன், ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் அருள்முருகன், சரண்யா நாகராஜ், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஞானமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, சிவாஜி, செல்வராஜ், நந்தா, மூர்த்தி, ரங்கன், திருமலையான், சதிஷ் லோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா: மாபெரும் கிரிக்கெட் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: