துவரங்குறிச்சி, செப். 4: துவரங்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எம்.பி நிதியிலிருந்து கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு கரூர் எம்பி ஜோதிமணி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். துவரங்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஜோதிமணி தனது எம்பி நிதியிலிருந்து ரூ.21 லட்சம் செலவில் பள்ளி வகுப்பறை கட்டுவதற்கு நேற்று பூமிபூஜையை செய்து துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளிடம் பேசிய ஜோதிமணி எம்பி, பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடலை பாட அதைப் பின் தொடர்ந்து பள்ளி மாணவிகளும் பாடினார். பாடலுக்கான விளக்கத்தையும் மாணவிகளிடம் எடுத்துரைத்தார். பள்ளி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் சரண்யா நாகராஜ் ,பொன்னம்பட்டி பேரூர் கழக செயலாளர் மும்பை நாகராஜ்,பொன்னம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் செல்வா, பொன்னுச்சாமி, அல்லிமுத்து, ரெங்கன் மற்றும் கழக உடன்பிறப்புகள், கூட்டணி கட்சி உறுப்பினர்கள், பொன்னம்பட்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post துவரங்குறிச்சி அரசு பெண்கள் பள்ளிக்கு எம்பி நிதியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமிபூஜை விழா appeared first on Dinakaran.
