ஆதிபராசக்தி வாரவழிபாட்டு குழு சார்பில் உடுமலையில் கஞ்சிக்கலய ஊர்வலம்

 

உடுமலை, செப்.4: மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி வாரவழிபாட்டுக்குழுவின் உடுமலை கிளை சார்பில் நேற்று உடுமலையில் கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செவ்வாடை அணிந்து கஞ்சிக் கலயத்துடன் ஊர்வலமாக சென்றனர். உடுமலையில் உள்ள ஆதிபராசக்தி கோயிலில் நேற்று முன்தினம் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து செவ்வாடை அணிந்த பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர். நேற்று உடுமலை மாரியம்மன் கோயிலில் இருந்து கஞ்சி கலய ஊர்வலம் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று கோவிலை சென்றடைந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாடை அணிந்து கைகளில் கஞ்சி கலயங்களுடன் சரண கோஷங்களை எழுப்பிய படி ஊர்வலம் சென்றனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post ஆதிபராசக்தி வாரவழிபாட்டு குழு சார்பில் உடுமலையில் கஞ்சிக்கலய ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: