முதல்வரின் சீரிய திட்டங்களால் நகராட்சியில் மேம்படுத்தப்படும் உள்கட்டமைப்பு : நகராட்சி சேர்மன் தகவல்

காரைக்குடி, செப்.3: காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளை முத்துத்துரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற வேண்டும் என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு, பகல் பாராது கடினமாக உழைத்து வருகிறார். அனைத்து துறையும் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என முதல்வர் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்.

உள்ளாட்சி துறையின் மேம்பாட்டுக்கு என பல்வேறு சீரிய திட்டங்களை முதல்வர் அறிவித்து உடனடியாக நடைமுறை படுத்தி வருகிறார். இந்நகராட்சியை பொறுத்தவரை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் உறுதுணையுடன் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான கூடுதல் நிதி பெறப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கண்ணதான் மணிமண்டபம் வளாகத்தில் ரூ.1 கோடியே 85 லட்சத்தில் அறிவுசார் மையம் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

கழனிவாசல் வியாழக்கிழமை சந்தை மேம்படுத்தப்பட்டு ரூ.6 கோடியே 19 லட்சத்தில் 88 கடைகள் கட்டப்பட்டு தினசரி மார்க்கெட்டாக மாற்றப்பட உள்ளது. சந்தைபேட்டை பகுதியில் ஏற்கனவே ஒரு எரிவாயு தகன மேடை உள்ள நிலையில் கழனிவாசல் பகுதியில் ரூ.1 கோடியே 41 லட்சத்தில் மேலும் ஒரு எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி மேம்படுத்த நிதி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பஸ் வந்து செல்ல வசதியாகவும், பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து ஒவ்வொரு திட்டமும் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார். நகர்மன்ற உறுப்பினர் கண்ணன், மாநில முதுநிலை ஒப்பந்தகாரர் பொறியாளர் செந்தில்குமார், வட்ட செயலாளர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post முதல்வரின் சீரிய திட்டங்களால் நகராட்சியில் மேம்படுத்தப்படும் உள்கட்டமைப்பு : நகராட்சி சேர்மன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: