கோபி கூகலூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பு

 

கோபி, செப்.2: கோபி அருகே உள்ள கூகலூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையத்தை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். கோபி அருகே உள்ள கூகலூர், மேவாணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு இருந்தது. தற்போது நெல்கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து நேற்று கூகலூர், மேவாணி ஆகிய பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் விவசாயிகள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் வழங்கப்பட்டு உள்ள பயோ மெட்ரிக் முறையையும், மழை பாதிப்புகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்காமல் இருக்கவும் நெல்லை காலதாமதம் இன்றி கொள்முதல் செய்ய கூடுதல் லாரிகளை இயக்க நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் கோபி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோரக்காட்டூர் ரவீந்திரன், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பானுமதி, கூகலூர் பேரூராட்சி தலைவர் ஜெயலட்சுமி, கூகலூர் பேரூர் கழக செயலாளர் ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கோபி கூகலூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: