அரிய வானியல்நிகழ்வுகளில் ஒன்றான சூப்பர் ப்ளூ மூன்: கண்டுகளித்த பொதுமக்கள்

 

டெல்லி: அரிய வானியல்நிகழ்வுகளில் ஒன்றான சூப்பர் ப்ளூ மூன் நேற்று வானில் தோன்றியதை மக்கள் கண்டு ரசித்தனர். முழு நிலவு நாட்களில் நிலா வழக்கத்தை விட பெரிதாக காட்சியளிப்பதே சூப்பர் மூன் எனப்படுகிறது. பூமிக்கு சற்று நெருக்கமாக முழு நிலவு காட்சியளிக்கும் சூப்பர் மூன் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் நிகழ்கிறது.

ஆனால் நடப்பாண்டு ஒரே மாதத்தில் இரண்டு சூப்பர் மூங்கில் காட்சிதந்தது. அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தின் முதல் நாள் நள்ளிரவில் சூப்பர் மூன் தோன்றியது. அதே போல நேற்று நள்ளிரவு இரண்டாவது சூப்பர் மூன் தோன்றியது. பொதுவாக ஒரே மாதத்தில் தோன்றும் இரண்டாவது சூப்பர் மூனை ப்ளூ மூன் என்று அழைக்கின்றனர்.

தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் சூப்பர் ப்ளூ மூன் தெரியததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சென்னை மெரீனா மற்றும் பட்டினம்பாக்கம் கடற்கரையோரம் தெரிந்த முழு நிலவை மக்கள் கண்டு ரசித்தனர். வடமாநிலங்களிலும் பல இடங்களில் இந்த அறிய நிகழ்வை கண்டு களித்தனர்.

ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலின் பின்னணியில் சூப்பர் ப்ளூ மூன் தோன்றியதை கண்டு சுற்றுலா பயணிகள் மெய் சிலிர்த்தனர். டெல்லி இந்தியா கேட் பகுதியிலும் திரளான மக்கள் கூடி சூப்பர் ப்ளூ மூனை கண்டுகளித்தனர். லக்னோ, கொல்கத்தா, கௌகாத்தி, பாட்னா உள்ளிட்ட பகுதிகளிலும் சூப்பர் ப்ளூ மூன் தெளிவாகவே தெரிந்தது. அடுத்த சூப்பர் ப்ளூ மூன் 2032ம் ஆண்டில் நிகழும் என கூறப்படுகிறது.

The post அரிய வானியல்நிகழ்வுகளில் ஒன்றான சூப்பர் ப்ளூ மூன்: கண்டுகளித்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: