சங்கரன்கோவிலில் பல்வேறு திட்டப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு சாலையோரங்களில் மரம் நடுவது குறித்து ஆலோசனை

சங்கரன்கோவில்.ஆக.31: சங்கரன்கோவிலில் நடக்கும் பல்வேறு திட்டப்பணிகளை நெடுஞ்சாலைதுறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் சந்திரசேகரன் ஆய்வு செய்தார். நெடுஞ்சாலைத்துறையில் தென்காசி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகரன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது வடகிழக்கு பருவ மழைக்கால முன்னேற்பாடு ஆயத்தப் பணி, சாலை பராமரிப்பு பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சாலையோரங்களில் மரக்கன்று நட்டு வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் சாலைப்பணியாளர்களுக்கு மரங்கள் நடுவது குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் பல்வேறு திட்டப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின்போது தென்காசி நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை கோட்ட பொறியாளர் ராஜசேகர், சங்கரன்கோவில் உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், உதவி பொறியாளர்கள் பலவேசம், முத்துமணி உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post சங்கரன்கோவிலில் பல்வேறு திட்டப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு சாலையோரங்களில் மரம் நடுவது குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: