மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா

குளச்சல்,ஆக. 31: மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா நடந்தது.குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் ரெத்னவேல் பாண்டியன் தலைமை வகித்தார். அறங்காவல் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.பள்ளி உதவி தலைமையாசிரியர் வினோத் வரவேற்று பேசினார்.கல்லுக்கூட்டம் பேரூயராட்சி தலைவர் மனோகரசிங்,மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கல்யாணகுமார்,அறங்காவல் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதீஸ்குமார்,சுந்தரி,துளசிதரன் நாயர்,மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மேலாளர் செந்தில்குமார்,திருக்கோயில் நிர்வாக முன்னாள் மேலாளர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.கலைஞர் பற்றி சிறப்பாக உரையாற்றிய 7ம் வகுப்பு மாணவி விசாகாவுக்கு பிரபா ராமகிருஷ்ணன் ரொக்கப்பரிசு வழங்கி கெளரவித்தார். நிகழ்ச்சியினை ஆசிரியர் சிவராம் தொகுத்து வழங்கினார்.தலைமையாசிரியர் (பொறுப்பு)சிவகாமி நன்றி கூறினார்.

The post மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: