மற்றொரு முதல் சுற்றில் களமிறங்கிய அமெரிக்க நட்சத்திரம் வீனஸ் வில்லியம்ஸ் 1-6, 1-6 என்ற நேர் செட்களில் பெல்ஜியம் வீராங்கனை கிரீட் மின்னனிடம் (26 வயது, 97வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். ரஷ்யாவின் இகடரினா அலெக்சாண்ட்ரோவாவுடன் மோதிய கனடா நட்சத்திரம் லெய்லா பெர்னாண்டஸ் 6-7 (4-7), 7-5, 4-6 என்ற செட் கணக்கில் போராடி தோற்றார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3 மணி, 4 நிமிடத்துக்கு நீடித்தது.
முன்னணி வீராங்கனைகள் ஜெஸ்ஸிகா பெகுலா, மேடிசன் கீஸ், சோபியா கெனின் (அமெரிக்கா), ஆன்ஸ் ஜெபர் (துனிசியா), அரினா சபலென்கா (பெலாரஸ்), டாரியா கசட்கினா, சாம்சனோவா (ரஷ்யா), மார்கெடா பவுஸ்கோவா (செக் குடியரசு) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), மெத்வதேவ், ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), யானிக் சின்னர் (இத்தாலி), ஆண்டி மர்ரே (இங்கிலாந்து), வாவ்ரிங்கா (சுவிஸ்), திமித்ரோவ் (பல்கேரியா) ஆகியோர் 2வது சுற்றில் நுழைந்துள்ளனர்.
The post யுஎஸ் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஸ்விடோலினா appeared first on Dinakaran.