மாமல்லபுரம் அருகே காகித ஆலைக்கு சவுக்கு மரங்கள் அனுப்பும் பணி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையையொட்டி சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் நெம்மேலி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் 3வது ஆலை ரூ.4276.44 கோடியில் அமைய உள்ளது. இந்த ஆலை 85.51 எக்கர் பரப்பளவில் தென் ஆசியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் 400 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆலையாக அமைகிறது.

கடந்த 21ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் இதற்கான அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், 3வது சுத்திகரிப்பு ஆலை கட்டும் பணிக்காக அங்குள்ள சவுக்கு மரங்களை வெட்டி காகித ஆலைக்கு லாரி மூலம் ஏற்றி அனுப்பும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில், அங்கு கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

The post மாமல்லபுரம் அருகே காகித ஆலைக்கு சவுக்கு மரங்கள் அனுப்பும் பணி appeared first on Dinakaran.

Related Stories: