அக்மே கென்னல் கிளப் சார்பில் தேசிய நாய்கள் கண்காட்சி: பல பிரிவுகளில் மதிப்பீடு செய்யப்பட்டு சிறந்த நாய்கள் தேர்வு

சேலம்: சேலத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான நாய் கண்காட்சியில் 400கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்தன. சேலம் தனியார் பள்ளி வளாகத்தில் அக்மே கென்னல் கிளப் சார்பில் 20வது அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் புனே கோலாப்பூர், பெங்களூர், போபால் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து பங்கேற்றன.

45 அரிய வகையினங்களை சேர்ந்த நாய்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட செல்ல பிராணிகள் பங்கேற்றன. இதில் நாய்களின் இனத்திற்கு ஏற்ப அதன் சுறுசுறுப்பு உரிமையாளர்களுக்கு கீழ்ப்படிதல், உயரம், பராமரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மதிப்பீடு செய்யப்பட்டு சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட சிறந்த நாய்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும், பரிசுகள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

The post அக்மே கென்னல் கிளப் சார்பில் தேசிய நாய்கள் கண்காட்சி: பல பிரிவுகளில் மதிப்பீடு செய்யப்பட்டு சிறந்த நாய்கள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: