தோகைமலை, ஆக. 28: பஞ்சப்பட்டி அருகே உள்ள போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகளை கிருஷ்ணராயபுரம் ஒன்றிய ஆணையர் சரவணன் ஆய்வு செய்தார். போத்துராவுத்தன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் 2 வகுப்பறையுடன் கூடிய புதிய கட்டிட பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமையல் கூடத்தை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் எனவும் ஒன்றிய ஆணையர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி தலைவர் அன்பரசு, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மலையாளம், ஊராட்சி செயலாளர் லட்மணன் ஆகியோர் உடனிருந்தனர்
The post போத்துராவுத்தன்பட்டி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை ஒன்றிய ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.
