மின் கம்பம் அகற்றிவிட்டு சாலை அமைக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ, வலியுறுத்தல்

 

திருப்பூர், ஆக.28: திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜேஷிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சிகாமணி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாநகராட்சி 5வது வார்டு வாவிபாளையம் பகுதியில் பேருந்து நிறுத்தம் முதல் பெருமாநல்லூர் ஊத்துக்குளி சாலை வரை சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக கடந்த ஒரு மாதம் முன்பு சாலையின் ஒரு புறம் குழி தோண்டப்பட்டது.

அடுத்த கட்டப் பணி எதுவும் செய்யாத நிலை இருந்தது. இதனால் சாலை குறுகலானதால் இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும், அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள் அகற்றாமல் சாலை போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களை உடனடியாக அகற்றி பின்னர் சாலை அமைக்கும் பணியை வேகப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மின் கம்பம் அகற்றிவிட்டு சாலை அமைக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ, வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: