வங்கி, எல்ஐசி தலைவர்களின் ஓய்வு வயது அதிகரிப்பா?..ஒன்றிய அரசு புதிய முடிவு

புதுடெல்லி: பொதுத்துறை வங்கி மற்றும் எல்ஐசி தலைவர்களின் ஓய்வு வயதை அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர்களின் பணி ஓய்வு வயது தற்போது 60 ஆக உள்ளது. இதை 62 ஆக அதிகரிக்க ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாக உயர் அதிகாரிகள் நேற்று தகவல் தெரிவித்துள்ளனர். இதே போல அரசின் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி சேர்மன் ஓய்வு வயதை 62ல் இருந்து அதிகரிக்கவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனாலும் இதில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக, எஸ்பிஐ வங்கி சேர்மன் தினேஷ் காராவின் பதவி நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தினேஷ் காரா கடந்த 2020 அக்டோபரில் எஸ்பிஐ தலைவராக பொறுப்பேற்றார். அவரது 3 ஆண்டு பதவிக்காலம் வரும் அக்டோபருடன் நிறைவடைகிறது. தற்போதைய விதிகளின்படி, எஸ்பிஐ வங்கி தலைவர் 63 வயது வரையிலும் பதவியில் இருக்கலாம். எனவே காராவின் பதவி நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post வங்கி, எல்ஐசி தலைவர்களின் ஓய்வு வயது அதிகரிப்பா?..ஒன்றிய அரசு புதிய முடிவு appeared first on Dinakaran.

Related Stories: