ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

 

ராஜபாளையம், ஆக.26: ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு கல்வி முறைக்கான கற்றல் அணுகுமுறைகள் குறித்த மூன்று நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை சார்பாக செயற்கை நுண்ணறிவு கல்வி முறைக்கான கற்றல் அணுகுமுறைகள் என்ற தலைப்பிலான மூன்று நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக கணினி பள்ளி மற்றும் கணினி அறிவியல் துறையின் பேராசிரியர் மஞ்சு காரி, ஒடிசா மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா டியோ பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை ஜான்மென்ஜோய் நாயக், தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (என்ஐடிடிஆர்) கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியர் மல்லிகா, திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சிவசங்கர்,

ராம்கோ கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறைத்தலைவர் காளியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். 40க்கும் மேற்பட்ட ஆசிரிய உறுப்பினர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ராஜகருணாகரன், நிர்வாகப் பொது மேலாளர் செல்வராஜ், துறை தலைவர் காளியப்பன், துறை தலைவர், இணைப் பேராசிரியர் ச.விமல் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி உதவி பேராசிரியர்கள் ரேவதி மற்றும் செல்வ பிருந்தா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.

The post ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு appeared first on Dinakaran.

Related Stories: