ஒன்றிய அரசு 3 சட்ட மசோதாக்களுக்கு இந்தியில் பெயர் சூட்டியுள்ளதற்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் கடும் எதிர்ப்பு..!!

டெல்லி: ஒன்றிய அரசு 3 சட்ட மசோதாக்களுக்கு இந்தியில் பெயர் சூட்டியுள்ளதற்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மசோதாக்களுக்கு இந்திப் பெயர் வைத்துள்ளதற்கு நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் தயாநிதி மாறன் எதிர்ப்பு தெரிவித்தார். அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சிய சட்டத்துக்கு பதில் புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 3 சட்டங்களுக்கு பதில் பாரதிய நகரிக் சுரக்சா சன்ஹிதா, பாரதிய நியாய சன்ஹிதா, சாட்சிய மசோதா என பாஜக பெயர் வைத்துள்ளது. ஒன்றிய அரசு சட்ட மசோதாக்களுக்கு இந்தியில் பெயர் வைத்துள்ளது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 348-க்கு எதிரானது.

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் 36 மசோதாக்கள் பற்றி உள்துறை செயலாளர் அஜய் பல்லா விளக்கிக் கூறினார் என்று தயாநிதி மாறன் குறிப்பிட்டார். தொடர்ந்து, 3 மசோதாக்களில் உள்ள குறைகள், இந்தி பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் 3 பக்க கடிதத்தையும் தயாநிதி மாறன் அளித்தார். இந்தி பேசாத தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கும் மசோதாக்களை எதிர்ப்பதாக தயாநிதி மாறன் கூறியுள்ளார். கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு விதிக்காததற்கும் தயாநிதி மாறன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

The post ஒன்றிய அரசு 3 சட்ட மசோதாக்களுக்கு இந்தியில் பெயர் சூட்டியுள்ளதற்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் கடும் எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: