திருப்பூர், ஆக.25: திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான பள்ளிகளுக்கிடையே மாணவர்கள் 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர்களுக்கான பூப்பந்து போட்டிகள் திருப்பூர் வித்ய விகாசினி பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் தர்மலிங்கம் போட்டிகளை துவக்கி வைத்தார். குறுமைய இணைச் செயலாளர் மோகன்ராஜ் முன்னிலையில், குறுமைய கண்காணிப்புக்குழு உறுப்பினர் மகேந்திரன் மேற்பார்வையில் போட்டிகள் நடைபெற்றது.
மாணவர்கள் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 2 அணிகள் பங்கேற்றதில், வித்ய விகாசினி பள்ளி முதலிடம், கருப்பகவுண்டம்பாளையம் அரசுப் பள்ளி இரண்டாம் இடம் பிடித்தன. 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில், 3 அணிகள் பங்கேற்றதில் வித்ய விகாசினி பள்ளி முதலிடம், கருப்பகவுண்டம்பாளையம், அரசு பள்ளி இரண்டாம் இடம், 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், 2 அணிகள் பங்கேற்றதில், வித்ய விகாசினி பள்ளி முதலிடம், கே.எஸ்.சி அரசுப்பள்ளி இரண்டாம் இடம் பிடித்தன. போட்டியின் நடுவர்களாக முருகன், பாலமுருகன், காமராஜ், விஜயகுமார் ஆகியோர் செயல்பட்டனர்.
The post தெற்கு குறு மைய பூப்பந்து போட்டி வித்ய விகாசினி பள்ளி வெற்றி appeared first on Dinakaran.
