மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விரிவுரையாளருக்கு மாணவர்கள் தர்மஅடி

லால்குடி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த வினோத்குமார் (33), வணிகவியல்துறை கவுரவ விரிவுரையாளராக உள்ளார். இவர் சில மாணவிகளுக்கு செல்போனில் எஸ்எம்எஸ், வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்தரமடைந்த சக மாணவர்கள், நேற்று காலை வணிகவியல்துறை அறைக்குள் நுழைந்து வினோத்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விரிவுரையாளருக்கு மாணவர்கள் தர்மஅடி appeared first on Dinakaran.

Related Stories: