டெல்டா மாவட்டங்களில் 4 நாள் பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: டெல்டா மாவட்டங்களில் 4 நாள் பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு புறப்பட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுர கல்லூரி பவள விழாவில் கலந்துகொண்டு நாளை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளையில் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அத்துடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதை தொடர்ந்து 26ம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு திருவாரூர் செல்லும் அவர், 27ம் தேதி நாகை கம்யூனிஸ்ட் கட்சி எம்பி செல்வராஜ் மகள் திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் மதியம் திருச்சியில் இருந்து விமானம் மூலமாக சென்னை வருகிறார். முதல்வரின் நான்கு நாள் வருகை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர், நாகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி திருச்சியில் இரு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக முதல்வர் செல்லவுள்ளதால், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் ஆகஸ்ட் 27ம் தேதிகளில் தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.

 

The post டெல்டா மாவட்டங்களில் 4 நாள் பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: