விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

உடுமலை, ஆக.23: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், பெதப்பம்பட்டியில் உள்ள குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஒன்றிய தலைவர் வலுப்பூரான் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு வாரம் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதை மாற்றி தொடர்ந்து 100 நாள் வேலை வழங்க வேண்டும். சட்டக்கூலியான 294 ரூபாயை குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும்.

வேலை நாட்களை 200 நாட்களாகவும், தினசரி ஊதியத்தை 600 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும். குடிமங்கலம் ஒன்றியத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய அனைத்து தொகுப்பு வீடுகளையும் இடித்துவிட்டு, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அரசின் இலவச வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும். சேதமான வீடுகளை பராமரிக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் தம்புராஜ், பொருளாளர் பழனிச்சாமி, கமிட்டி உறுப்பினர்கள் ஆறுமுகம், சிவக்குமார், மணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத்தலைவர் சுந்தர்ராஜ், ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், முருகன் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: