விமானத்தில் கடத்தி வரப்பட்ட தாய்லாந்து நாட்டின் அரிய விலங்குகள் பறிமுதல்: வாலிபர் கைது

சென்னை: சென்னைக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட, வெளிநாட்டு அரிய வகை அணில்கள், மலைப்பாம்பு, நீல நிற உடும்பு ஆகியவை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவர், இரண்டு பெரிய பிளாஸ்டிக் கூடைகளை எடுத்து வந்தார். சுங்க துறை அதிகாரிகள், அவரை நிறுத்தி அக்கூடைகளை சோதனை இட்டனர். அதில், மலைப்பாம்பு குட்டிகள் இருந்தன.

அத்துடன், சுங்கத்துறையில் துணிச்சலான ஊழியர்கள் சிலரின் உதவியுடன், நடத்திய சோதனையில், 16 மலைப்பாம்பு குட்டிகள் இருந்தன. அதோடு நீல நிற உடும்புகள் 30 இருந்தன. மேலும், பெர்சியன் வகை அணில்கள் 4 இருந்தன. இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியையும், அவர் கொண்டு வந்த பாம்புகள், உடும்புகள், அணில்கள் அடங்கிய கூடைகளையும் ஒரு அறையில் வைத்து அடைத்து வைத்து, சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்ற பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.  வனத்துறையினர் கூறியதாவது: நீல நிற உடும்புகள் 40 ஆண்டுகள் உயிர் வாழும்.

மத்திய, தென் அமெரிக்க வனப்பகுதிகளில் அதிகமாக காணப்படும். இவற்றின் விஷம் மனிதர்களை கொல்லக்கூடிய அளவுக்கு கடுமையானது இல்லை. பெர்சியன் வகை அணில்கள் ஈரான் மற்றும் மேற்காசிய வனப்பகுதிகளில் உள்ளன. 36 சென்டிமீட்டர் நீளம் வளரக்கூடியவை. அதைப்போல் இந்த மலைப்பாம்பு குட்டிகள் அனைத்தும், வெளிநாடுகளில் அடர்ந்த வனப்பகுதிகளில், குளிர் பிரதேசங்களில் இருக்கக்கூடியவைகள், இவைகள் விஷமற்றவை. இவற்றை கடத்தி வந்த ஆசாமியிடம் விசாரணை நடத்தினர். இந்த உயிரினங்களை நமது நாட்டுக்குள் அனுமதித்தால், வெளிநாட்டு நோய் கிருமிகள் பரவி, விலங்குகள், மனிதர்களுக்கும் பல்வேறு நோய்கள் உருவாகும் ஆபத்து உள்ளது.

இதையடுத்து, சுங்க அதிகாரிகள், அப்பயணியை கைது செய்தனர். அதோடு இந்த விலங்குகளை நேற்று அதிகாலை சென்னையில் இருந்து, பாங்காக் செல்லும் தாய் ஏர்வேஸ் விமானத்தில், திருப்பி அனுப்பவும், அதற்கான விமான செலவுகள் அனைத்தையும், கடத்தல் ஆசாமியிடம் வசூலிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

The post விமானத்தில் கடத்தி வரப்பட்ட தாய்லாந்து நாட்டின் அரிய விலங்குகள் பறிமுதல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: