கல் குவாரியில் டிப்பர் லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே கல் குவாரியில் டிப்பர் லாரி தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (84). இவர் திண்டிவனம் அடுத்த வெள்ளகுளம் பகுதியில் கல் குவாரி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது குவாரியில் இயங்கி வரும் பொக்லைன் இயந்திரத்துக்கு லாரியில் உதிரி பாகங்கள் ஏற்றி செல்லப்பட்டுள்ளது. லாரியை வெள்ளகுளம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (37) என்பவர் ஓட்டிச் சென்றார். உதிரி பாகங்களை இறக்கிவிட்டு, பின்னர் மீண்டும் லாரியை எடுத்து சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரி இன்ஜினில் இருந்து புகை மூட்டம் அதிகமாக வந்துள்ளது. இதனை கண்ட ஓட்டுநர், லாரியில் ஹேண்ட் பிரேக் போட்டுவிட்டு கீழே இறங்கிவிட்டார். சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான லாரி தீயில் எரிந்து நாசமானது. லாரி தீப்பிடித்து எரிந்ததில் அப்பகுதி முழுவதும் கரும்புகை கிளம்பியதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கல் குவாரியில் டிப்பர் லாரி தீப்பிடித்து எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Related Stories: