உலகக் கோப்பை செஸ்: ஃபேபியானோ கருவானா – பிரக்ஞானந்தா இடையே இன்று ரேபிட் முறையில் போட்டிகள்

அஜர்பைஜான்: உலகக் கோப்பை செஸ் போட்டியில் ஃபேபியானோ கருவானா – பிரக்ஞானந்தா இடையே இன்று ரேபிட் முறையில் போட்டிகள் நடைபெற உள்ளது. இரண்டாது சுற்று அரையிறுதி போட்டியும் டிராவில் முடிந்ததால் ரேபிட் முறையில் போட்டிகள் நடக்கின்றன. ரேபிட் முறையில் நடக்கும் போட்டிகளும் டிராவில் முடிந்தால் பிளிட்ஸ் முறைப்படி போட்டிகள் நடைபெறும்.

உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. அரையிறுதி போட்டியில் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலகத் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை எதிர்கொண்டார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78வது நகர்த்தலின் போது டிராவில் முடித்தார். நேற்று நடைபெற்ற அரை இறுதி சுற்றின் 2வது ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா 47வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிரா செய்தார்.

இரு ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்ததால் கருவானா – பிரக்ஞானந்தா இடையே இன்று ரேபிட் முறையில் போட்டிகள் நடைபெற உள்ளது. இரண்டாது சுற்று அரையிறுதி போட்டியும் டிராவில் முடிந்ததால் ரேபிட் முறையில் போட்டிகள் நடக்கின்றன. ரேபிட் முறையில் நடக்கும் போட்டிகளும் டிராவில் முடிந்தால் பிளிட்ஸ் முறைப்படி போட்டிகள் நடைபெறும்.

The post உலகக் கோப்பை செஸ்: ஃபேபியானோ கருவானா – பிரக்ஞானந்தா இடையே இன்று ரேபிட் முறையில் போட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: