சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் கார்லோஸ், ஜோகோவிச்: ஸ்வியாடெக் கோகோ காஃப், சபலென்கா கரோலினா முன்னேற்றம்

சின்சினாட்டி: அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் வெஸ்டர்ன்-சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் உலகின் நெம்பர் ஒன் வீரரான கார்லோஸ் அல்கராஸ்(ஸ்பெயின்) 2மணி 11 நிமிடங்களில் 4-6, 6-3, 6-4 என்ற செட்களில் சென்னை ஓபன் சாம்பியன் மேக்ஸ் புர்செல்லை(ஆஸ்திரேலியாவை) வீழ்த்தினார். மற்றொரு காலிறுதியில் உலகின் 2ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச்(செர்பியா) ஒரு மணி ஒரு நிமிடத்தில் 6-0, 6-4 என நேர் செட்களில், 9ம் நிலை வீரர் டெய்லர் ஃபிரிட்சை(அமெரிக்கா) சாய்த்தார். அல்கராஸ், ஜோகோவிச், 17ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), 20ம் நிலை வீரர் ஹூபர்ட் ஹர்காஸ்(போலந்து) ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்களில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா(2வது ரேங்க்) ஒரு மணி 29நிமிடங்களில் 2-0 என நேர் செட்களில் துனிஷியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபவூரை(5வது ரேங்க்) வீழ்த்தினார். இளம் வீராங்கனை அமெரிக்காவின் கோகோ காஃப் (7வது ரேங்க்) ஒரு மணி 12 நிமிடங்களில் 2-0 என்ற நேர் செட்களில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினியை வென்றார். அரையிறுதி ஆட்டங்களில் அல்கராஸ்- ஹர்காஸ், ஜோகோவிச்-ஸ்வெரவ் ஆகியோர் மோத உள்ளனர். அதேபோல் மகளிர் அரையிறுதியில் நெம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக்(போலாந்து)- கோகோ காஃப், அரினா சபலென்கா-கரோலினா முச்சோவா(செக்குடியரசு) ஆகியோர் மோத இருக்கின்றனர்.

The post சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் கார்லோஸ், ஜோகோவிச்: ஸ்வியாடெக் கோகோ காஃப், சபலென்கா கரோலினா முன்னேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: