கொலம்பியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த நில நடுக்கங்களால் வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து வெளியேறிய மக்கள் திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். கொலம்பியா தலைநகர் பொகோட்டாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் கட்டடங்களில் இருந்து வெளியேறினர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
The post கொலம்பியாவை அடுத்தடுத்து தாக்கிய நில நடுக்கம்: 6.3 ரிக்டர் பதிவு..!! appeared first on Dinakaran.