வீட்டுமனை பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்

பழநி, ஆக. 18: பழநி அருகே சின்ன வேலம்பட்டி, தொப்பம்பட்டி, திருவாண்டபுரம், தும்பலப்பட்டி, பாறைப்பட்டி, கோரிக்கடவு, வில்வாதம்பட்டி, பெரிச்சிபாளையம் கிராமங்களில் ஏழை மக்களுக்கு தாமதமின்றி வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். மானூர் விநாயகர் கோயில் காலனியில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழநி கோட்டாட்சியர் அலுவலர் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றியத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் கனகு முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன் சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனைத்தொடர்ந்து கோரிக்கைகளை பழநி கோட்டாட்சியர் சரவணனிடம் மனுவாக வழங்கி கலைந்து சென்றனர். போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post வீட்டுமனை பட்டா கோரி காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: