பலத்த போலீஸ் பாதுகாப்பு: தென்னக ரயில்வே கூட்டுறவு நாணய சங்க தேர்தல்

திருச்சி, ஆக.18: தென்னக ரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தின் இயக்குனர் பதவிக்கான தேர்தல் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. தஞ்சை கோட்டத்திற்கு இன்றும், மதுரை கோட்டத்திற்கு நாளையும் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மொத்தம் 9 இயக்குனர்களுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. அதில் ஆறு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஒரு பதவி என மொத்தம் 9 இயக்குனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த இயக்குனர்கள் தேர்தலில் மொத்தம் 31 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் நேற்று காலை முதலே தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக வந்து வாக்களித்தனர். அதில் பொன்மலை பணிமனை ஊழியர்கள், திரு ச்சி ஜங்ஷன் ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர் ந்த ரயில்வே தொழிலாளர்கள் தங்களுடைய வாக்குகளை தென்னக ரயில்வே கூட்டுறவு நாணய சங்க அலுவலகத்தில் பதிவு செய்தனர். வருகின்ற 26ம் தேதி ஒட்டு மொத்த தமிழக ரயில்வேயில் நடைபெற்ற தேர்தல் வாக்கு பெட்டிகள் அனைத்தும் திருச்சி ஜங்ஷன் ரயில்வே திருமண மண்டபத்தில் வைத்து வாக்கு எண்ணும் பணி நடைபெறும் என்று ரயில்வே தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post பலத்த போலீஸ் பாதுகாப்பு: தென்னக ரயில்வே கூட்டுறவு நாணய சங்க தேர்தல் appeared first on Dinakaran.

Related Stories: