பல்லாவரம் பகுதிகளில் கஞ்சா விற்ற ஐடி ஊழியர் உள்பட 3 பேர் சிக்கினர்: 2.5 கிலோ பறிமுதல்

பல்லாவரம்: பல்லாவரம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐடி ஊழியர் உள்பட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் சுடுகாடு பகுதியில் கடந்த வாரம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கே.கே.நகர் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த அஜய் (21), பூந்தமல்லி சுமித்ரா நகர் 3வது தெருவை சேர்ந்த மரிய அந்தோணி செல்வம் (28), போரூர் அடுத்த ராமாபுரம், ஈஸ்வரன் தெருவை சேர்ந்த விஷ்ணு (27) ஆகிய 3 பேர், பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், நேற்று முன்தினம் அந்த 3 பேரையும் கைது செய்தனர். இதில் இன்ஜினியரான விஷ்ணு, துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும், தன்னுடன் பணியாற்றும் வாலிபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களிடம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 2.5 கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பல்லாவரம் பகுதிகளில் கஞ்சா விற்ற ஐடி ஊழியர் உள்பட 3 பேர் சிக்கினர்: 2.5 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: