மேலமையூர் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

செங்கல்பட்டு: மேலைமையூர் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் மேலமையூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் செலவில கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மற்றும் ஊராட்சி நிதியில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா ஆகிய திறப்பு விழா நேற்று முன்தினம் மேலமையூர்‌ ஊராட்சி‌ மன்ற தலைவர் ஹலன்சிந்தியா சரவணன் தலைமையில் நடந்தது.

இதில், சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டார். பின்னர், புதிய ரேஷன் கடை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை திறந்து வைத்தார். இந்நிகழ்வில், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆப்பூர்.சந்தானம், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி‌ துனணத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், திமுக ஒன்றிய ஊராட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

The post மேலமையூர் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: