முகூர்த்த தினம் ஆக.19, 20 தேதியில் வருவதால் சென்னையில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: தமிழ்நாடு அரசு விழுப்புரம் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை: வரும் 20 மற்றும் 21ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் சுபமுகூர்த்த தினம் என்பதால் வார இறுதி நாட்களான வரும் 19 மற்றும் 20ம் தேதி அன்று பயணிகள் வருகை மிகுதியாக இருக்கும்.

எனவே பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் வருகை குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

The post முகூர்த்த தினம் ஆக.19, 20 தேதியில் வருவதால் சென்னையில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: