சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ஜபீர் தகுதி

சின்சினாட்டி: அமெரிக்காவில் வெஸ்டர்ன்&சதர்ன் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த 2வது சுற்று போட்டியில், அமெரிக்காவின் 30 வயதான ஸ்லோன் ஸ்டீபன்ஸ், 6ம் நிலை வீராங்கனையான 29 வயதான பிரான்சின் கரோலின் கார்சியாவுடன் மோதினார். இதில் 4-6 என முதல் செட்டை கார்சியா கைப்பற்ற அடுத்த 2 செட்டையும் 6-4,6-4 என ஸ்டீபன்ஸ் தன்வசப்படுத்தினார். முடிவில் 4-6,6-4,6-4 என ஸ்டீபன்ஸ் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில், 5ம் நிலை வீராங்கனையான 30 வயது துனிசியாவின் ஓன்ஸ்ஜபீர், 6-3,6-7,7-6 என உக்ரைனின் அன்ஹெலினா கலினினாவை வீழ்த்தினார்.

The post சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ஜபீர் தகுதி appeared first on Dinakaran.

Related Stories: