நீதியை அணுகுவதற்கான தடைகளை அகற்றுவதே மிகப்பெரிய சவால்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

புதுடெல்லி: நீதியை அணுகுவதற்கான தடைகளை அகற்றி கடைசி நபரும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதே இந்திய நீதித்துறையின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.  உச்ச நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டார். அப்போது தலைமை நீதிபதி பேசியதாவது: நீதிமன்றங்களை அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் உள்கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும். மக்கள் எளிதில் அணுகக்கூடிய மற்றும் செலவு குறைந்த நீதித்துறை அமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

நீதிக்கான நடைமுறை தடைகளை கடப்பதற்கு தொழில்நுட்பத்தின் முழு திறனையும் பயன்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தில் இதுவரை 9423 தீர்ப்புக்கள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரை 19000 வழக்குகள் உச்சநீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தை பார்க்கும்போது நீதியை அணுகுவதற்கான தடைகளை அகற்றுவதே இந்திய நீதித்துறை முன் உள்ள மிகப்பெரிய சவால் என்று நான் நம்புகிறேன். பொதுமக்கள் நீதிமன்றங்களை அணுகுவதை தடுக்கும் தடைகளை அகற்றி, நீதிமன்றங்களின் திறன் மீது நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம், நடைமுறைரீதியாக நீதிக்கான அணுகலை மேம்படுத்த வேண்டும்” என்றார் தலைமை நீதிபதி சந்திரசூட்.

The post நீதியை அணுகுவதற்கான தடைகளை அகற்றுவதே மிகப்பெரிய சவால்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து appeared first on Dinakaran.

Related Stories: