நாட்டின் சுகாதார அமைப்பை மோடி அரசு நோயாளியாக்கி விட்டது: காங். தலைவர் கார்கே கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மோடி தலைமையிலான பாஜ அரசு நாட்டின் சுகாதார அமைப்பை நோயாளியாக்கி விட்டது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன் எக்ஸ் ட்விட்டர் பதிவில் நாட்டிலுள்ள 19 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லை என செய்தி ஊடகத்தில் வௌியான அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து தன் பதிவில், “மோடியின் ஒவ்வொரு வார்த்தையிலும் பொய்கள் மட்டுமே பொதிந்துள்ளன. நாட்டில் பல எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மோடி கூறினார்.

ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் இல்லை என்பதே உண்மை. கொரோனா தொற்று காலத்தில் இருந்து ஆயுஷ்மான் பாரத் மோசடி வரை உங்கள் அரசில் வாய்ஜாலங்களும், கொள்ளைகளுமே நிறைந்துள்ளன. உங்கள் அரசாங்கம் நாட்டின் சுகாதார அமைப்பை நோய்வாய்ப்படுத்தி விட்டது. மக்கள் விழித்து கொண்டு விட்டனர். உங்கள் வஞ்சக வார்த்தைகள் அங்கீகரிக்கப்பட்டு உங்கள் அரசு விடைபெறும் நேரம் நெருங்கி விட்டது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நாட்டின் சுகாதார அமைப்பை மோடி அரசு நோயாளியாக்கி விட்டது: காங். தலைவர் கார்கே கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: